சன் டிவிக்கு த்ரிஷா விடுத்த வேண்டுகோள்..!

Published : Nov 03, 2018, 05:54 PM IST
சன் டிவிக்கு த்ரிஷா விடுத்த வேண்டுகோள்..!

சுருக்கம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியாகியது. நாளையுடன் ஒரு மாதத்தை எட்ட உள்ள இந்த திரைப்படம் தற்போதும் 25 நாட்களை நடந்து ஓடி வருகிறது. 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியாகியது. நாளையுடன் ஒரு மாதத்தை எட்ட உள்ள இந்த திரைப்படம் தற்போதும் 25 நாட்களை நடந்து ஓடி வருகிறது. 

துளியும் ஆபாசம் இன்றி, சிறு வயது காதலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் போது ஏற்படும் அனுபவங்களை மிகவும் நேர்த்தியாக எடுத்திருந்தார் இயக்குனர். 

த்ரிஷாவும் - விஜய் சேதுபதியும்  ராம், ஜானு இணைகிற கேரக்தராகவே மாறி நடித்திருந்தார்கள் என இவறுகளுடைய நடிப்பிற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.  ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்டதால் ரிப்பீட் ஆடியன்ஸ்கள் கூட இந்த படத்திற்கு அதிகம் வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் திரையரங்குகளில் கூட்டம் கணிசமாகவே குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்த படத்தின் நாயகி த்ரிஷா கூறியபோது, '96' திரைப்படம் ஐந்தாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்புவதில் எங்கள் டீமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே '96' திரைப்படத்தை தீபாவளி அன்று ஒளிபரப்பாமல் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பும்படி த்ரிஷா கோரிக்கை விடுத்துள்ளார். சன்டிவி நிறுவனம் இதனை ஏற்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!
ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ