
நடிகையும், நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் சமீப காலமாகவே மத்தியில் ஆச்சு செய்து வரும் பாஜக கட்சியில் இணைந்து, பணியாற்றி வருகிறார். அடிக்கடி சர்ச்சையில் வாண்டடாக சிக்கும் இவர்... அரசியல் கருத்து குறித்து தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை கூறி அதிர வைத்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள், மற்றும் திட்டங்கள் குறித்து பேசிவரும் இவர், பாஜகவின் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டால், அதற்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.
மேலும் செய்திகள்: நாளுக்கு நாள்குறைந்து கொண்டே போகும் டிரஸ் சைஸ்! கூடி கொண்டே போகும் கிளாமர்! அத்துமீறும் ஆத்மீகா!
குறிப்பாக சில மாதங்களாகவே CAA குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பல போராட்டங்கள் வெடித்தது. இதில் மாணவர்களும் கலந்து கொண்டு போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மத்தியில் இந்த சலசலப்பு சற்று தனித்துள்ள நிலையில். தற்போது முஸ்லீம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை காயத்திரி ரகுராம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ட்விட் செய்து அரசியல் பிரபலங்களையே அதிரவைத்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... "சட்டத்திற்கு எதிராக அல்லது போலி செய்திகளை பரப்பினால் அவர்கள் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. என்றும் பாராமல் தமிழக அரசு அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் எம்.பி. செந்தில், ஜோதிமணி, திருமாவளவன் ஆகியோரை இடைநீக்கம் செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: நடிகை நாம்யா நம்பீசன் எடுத்த புது அவதாரம்! அசந்து போய் நிற்கும் திரைபிரபலங்கள்!
காயத்ரி ரகுராம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி... எம்.எல்.ஏக்கள் பேரை நேரடியாக கூறி ட்விட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.