#வாயை_மூடு_Podi... பிக்பாஸ் ஓவியாவிற்கு காயத்ரி ரகுராமின் நெந்தியடி பதிலடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 13, 2021, 07:12 PM IST
#வாயை_மூடு_Podi... பிக்பாஸ் ஓவியாவிற்கு காயத்ரி ரகுராமின் நெந்தியடி பதிலடி...!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாற்கு கடும் போட்டியாளராக இருந்த பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஓவியாவின் ட்வீட்டிற்கு நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ். அடையாறு செல்லும் பிரதமர், விழா அரங்கமான நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். 

அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், சாலை வழியாக மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து பகல் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிலர் டுவீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாற்கு கடும் போட்டியாளராக இருந்த பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஓவியாவின் ட்வீட்டிற்கு நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், #வாயை_மூடு_Podi என்பது சரியாக இருக்கும். உன்னை அவமதிக்க எதுவுமில்லை. நான் உனக்கு எப்போதுமே எதிரானவள் தான். நான் சரியானதைத் தேர்வு செய்திருக்கிறேன் என வெளுத்து வாங்கியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!