2010 - ல் விவாகரத்து! இப்போது கர்பம்! புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி!

By manimegalai aFirst Published Nov 2, 2018, 4:29 PM IST
Highlights

பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர்  சார்லி சாப்ளின், விசில், ஸ்டைல், வானம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தந்தையை தொடர்ந்து இவரும் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் பாலா இயக்கிய தாரைதப்பட்டை படத்தில் கூட ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இதை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் கண்ட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் இவர் கர்பமாக உள்ளது போல் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காயத்திரி ரகுராம் அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2010  ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து தற்போது தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார்.

விவாகரத்து ஆகிய பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளாத இவர் இப்போது எப்படி கர்பம் ஆனார் என்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். 

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில், குறும்படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன் என்று கூறி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலர் இவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். இது ரீல் கர்ப்பமா அல்லது ரியல் கர்பமா என காயத்திரி ரகுராம் தான் வாயை திறந்து இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். 

click me!