
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், சதீஷ், பாலசரவணன் மற்றும் பலர் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் படம் 'ஹரஹர மகாதேவகி'.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 'கருப்பன்' படத்துடன் இன்று வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதா? பார்க்கலாம்...
18 வயது
"ஹரஹர மஹாதேவகி முதல் பாதி ஓகே. கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்கலாம்" என தளபதி ஆகி கருத்து தெரிவித்திருக்கிறார்.
நண்பர்கள்
"18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பொழுதுபோக்கு படம் நண்பர்களுடன் பார்த்து மகிழலாம்" என ராம் ஹஹரமகாதேவகி படம் குறித்து டுவீட் செய்துள்ளார்.
வயது வந்தவர்களுக்கு
"ஹரஹர மஹாதேவகி வயது வந்தவர்களுக்கான படம். ஒருமுறை பார்க்கலாம்" என சரவணன் என்னும் ரசிகர் பதிவு செய்திருக்கிறார்.
அஜீத்
ஹஹரமஹாதேவகி படத்தில் அஜீத் ரெபரன்ஸ் சும்மா தெறிக்குது என மோசஸ் என்னும் ரசிகர் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் கவுதம் கார்த்திக்கின் 'ஹரஹா மஹாதேவகி' வயது வந்தவர்களுக்கு மட்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.