
விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, சிங்கம்புலி, கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் படம் கருப்பன்.
ரேணிகுண்டா புகழ் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜல்லிக்கட்டு மற்றும் கணவன்-மனைவி இடையேயான உறவை வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களைக் கவரும் என விஜய் சேதுபதி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அவரின் நம்பிக்கை பலித்ததா? படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி
"கருப்பன் முதல் பாதி நன்றாக இருந்தது. விஜய் சேதுபதி ரகளை செய்து விட்டார். குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்கலாம்" என சைத்து தெரிவித்திருக்கிறார்.
காமெடி+ஆக்ஷன்
"கருப்பன் படத்தின் காமெடி,ஆக்ஷன், செண்டிமெண்ட் எல்லாமே சூப்பர். விஜய் சேதுபதி நன்றாக நடித்திருக்கிறார். குடும்பத்துடன் பார்க்க நல்ல பொழுதுபோக்கு படம்" என திரு மனதார பாராட்டியிருக்கிறார்.
மாஸ்
கருப்பன் முதல் பாதி செம மாஸ். சந்தோஷமாக இருக்கிறது. 2- வது பாதிக்காக காத்திருக்கிறேன்" என அஜித் சேகர் மகிழ்ச்சியுடன் டுவீட் செய்துள்ளார்.
வசனம்
கருப்பன் படத்தின் வசனங்கள் நன்றாக இருப்பதாக செந்தில்குமார் பாராட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் 'மாஸ்' என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். புரியாத புதிரில் சறுக்கிய விஜய் சேதுபதி இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.