30 ஆண்டுகளுக்கு பிறகு கரகாட்டக்காரன் பாகம் - 2 ..? வாழைப்பழ காமெடி முதல் சொப்பன சுந்தரி கார் வரை நினைவிருக்கிறதா..?

By ezhil mozhiFirst Published Jun 21, 2019, 5:48 PM IST
Highlights

கரகாட்டக்காரன் திரைப்படம் நம் யாராலும் மறந்து இருக்கவே முடியாது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த வாழைப்பழ காமெடி முதல் சொப்பன சுந்தரி காமெடி வரை இன்றளவும் அனைவராலும் பேசப்பட்டு ரசித்து சிரிக்க முடிகிறது.

கரகாட்டக்காரன் திரைப்படம் நம் யாராலும் மறந்து இருக்கவே முடியாது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த வாழைப்பழ காமெடி முதல் சொப்பன சுந்தரி காமெடி வரை இன்றளவும் அனைவராலும் பேசப்பட்டு ரசித்து சிரிக்க முடிகிறது. இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியும் அனைவர் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்து உள்ளது என்றால் அதில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காமெடியும். அந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களான ராமராஜன்,கனகா என சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஒரு நிலைமையில், இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கங்கைஅமரன் ஒரு நேர்காணலில், கரகாட்டகாரன் இரண்டாம் பாகம் உருவாக கூட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து இருந்தார். அந்த படத்தில் மீண்டும் முதல் பாகத்தில் நடித்த அதே குழு நடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து நடிகர் ராமராஜன் தெரிவித்து உள்ள கருத்து இருதுதான்..!

அந்த காலகட்டத்தில் 485 நாட்கள் ஓடிய மிகச்சிறந்த படம் அந்த படம். இந்த சூழ்நிலையில் இரண்டாம் பாகம் படம் எடுத்தால் அது மீண்டும் சரியாக வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உதாரணத்திற்கு சிங்கம் 2, சிங்கம் படம் போன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஒன்றும் பெறவில்லை. எனவே இதனை கணிக்க முடியாது. தற்போது பட வாய்ப்புகள் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் எனக்கு ஏற்றவாறு இருந்தா நடிப்பேன்... அதை விட்டுவிட்டு தாத்தா, ரவுடி... இந்த மாதிரி ரோலில் நடிக்க சொன்னால் எனக்கு செட் ஆகாது. எனவே தவிர்த்துவிடுகிறேன்.

கங்கை அமரன் தொடர்ந்து கரகாட்டக்காரன் படம் பாகம் 2 எடுக்க வேண்டும் என கேட்கிறார். அவரிடம் நான் எப்போதுமே சொல்வது என்னை ஆளை விடுங்க சாமி.. எனக்கு செட்டாகாது... என தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி படத்தில் துணை முதல்வராக நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அதை நான் தவிர்த்துவிட்டேன். காரணம் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரடியாக குறிக்கும் வகையில் உள்ளதால் தவிர்த்துவிட்டேன். அந்த வாய்ப்பு ஜேகே ரித்தீஷ் விற்கு சென்றது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் யாரை குற்றம் சொல்வது? என மிக எளிதாக குறிப்பிட்டுவிட்டு மௌனமாகி உள்ளார் ராமராஜன். 

click me!