இனி பாடப்போவதில்லை... இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிய கானா பாலா...

 
Published : Jun 05, 2017, 04:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
இனி பாடப்போவதில்லை... இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிய கானா பாலா...

சுருக்கம்

Gana bala quit the song singing

2007 ஆண்டு 'பிறகு' படத்தின் மூலம் கானா  பாடகராக அறிமுகம் கொடுத்தவர் கானா பாலா, 2012 ஆண்டு வெளிவந்த  அட்டகத்தி படத்தில் மிகவும் பிரபலமான பாடகராக அறியப்பட்டார்.

இந்த படத்தை பல படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்து  முன்னணி பாடகர்களில் ஒருவராக அறியப்பட்டது மட்டும் இன்றி, இவர் எழுதி பாடும் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, இவர் பாடியுள்ள சில பாடங்களுக்கு சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

தற்போது  தான் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாடவுள்ளதாகவும் அதற்கு மேல் பாடமாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எப்போதும் வளர்ந்து வரும் சந்ததிகளுக்கு, வளர்ந்தவர்கள் வழி விட்டால் தான் அவர்கள் வளர்வார்கள். எனவே நான் இப்போது விலகும் நேரம் வந்துவிட்டது என்றும்  இனி இந்த கலையை எடுத்து செல்ல மற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இவரின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரை போலவே பலரும் இளைஞர்கள் சாதிக்க வழிவிட வேண்டும் என சமூவலைத்தளங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!