
கடந்த ஒரு வாரமாக உலகத்தை கலக்கி வரும் ஒரு பெயர் "வொன்டர் வுமன்".
பேட்டி ஜாக்கின்ஸ் (Patty Jenkins) என்ற பெண் இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வழக்கமாக ஆண்களை மட்டுமே மையப்படுத்தி வரும் சூப்பர்ஹீரோ படங்களுக்கு மத்தியில் இவர் பெண்ணை மையமாக எடுத்த படம்தான் வொன்டர் வுமன்.
இப்படம் தற்போது வசூலில் செம்ம சாதனை படைத்து வருகிறது.
முதல் வாரத்தில் மட்டும் 223 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1436 கோடியாகும். இதில் 244 கோடி ரூபாய் சீனாவில் மட்டுமே வசூலாகியுள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தோர் (Thor), அயர்ன் மேன் (Iron Man (first 2 parts)), கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி (Guardians of the Galaxy), மேன் ஆப் ஸ்டீல் (Man of Steel) போன்ற ஆண் சூப்பர் ஹீரோ படங்களை விட அதிகம்.
பேட்டி ஜாக்கின்ஸ்-ன் முந்தைய படம் ஆஸ்கார் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.