
வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி செம வைரலானது. படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.
இந்தநிலையில் திரௌபதி திரைப்படத்தை பார்ப்பதற்காக பெண்களுக்கு இலவச டிக்கெட்டை தனியார் திரையரங்கு ஒன்று வழங்கியுள்ளது. கடலூரில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் திரௌபதி திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கு இலவச டிக்கெட் அளிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் மகள்களுடன் திரையரங்கிற்கு வந்த படம் பார்த்தனர்.
திரௌபதி திரைப்படத்தில் பிரபலங்கள் யாரும் இல்லாமல் புதுமுகங்கள் மட்டுமே நடித்துள்ளனர். எனினும் கடந்த வெள்ளி முதல் அனைத்து திரையரங்குகளிலும் 3 வது நாளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரண்டு முறை திரௌபதி திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை ஓரத்தில் காரில் வைத்து சிறுமிக்கு நடந்த கொடூரம்..! மாறி மாறி கற்பழித்த நண்பர்கள்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.