விஜய்க்கு பெண் ரசிகர்களை உருவாக்கிய மெகா ஹிட் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுவா?

Published : Jan 29, 2019, 10:04 PM IST
விஜய்க்கு பெண் ரசிகர்களை உருவாக்கிய மெகா ஹிட் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுவா?

சுருக்கம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு மெகா ஹிட் அடித்த  "துள்ளாத மனமும் துள்ளும்" படத்திற்கு முதல் முதலாக வைக்கப்பட இருந்த தலைப்பு என்ன என்பதை அப்படத்தின் இயக்குனர் எழில் தற்போது கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்த படம் தான் "துள்ளாத மனமும் துள்ளும்", இந்தப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கிராமப்புறங்களிலும்  விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்ல, தற்போது விஜயின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எழில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது எழில் முதலில் இந்த படத்திற்கு "ருக்குமணிக்காக" என்று தான் டைட்டில் வைக்க இருந்துள்ளார்.

அதன் பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளர் "பார்த்தாலே பசி தீரும்" இப்படியான ஸ்டைலில் தலைப்பு வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தான் இப்படத்திற்கு எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" என வைத்ததாக கூறியுள்ளார்.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் #20YearsOfEvergreenSuperhitTMT என்ற டேக் உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?