
பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்திற்கு பிறகு, இசைஞானி இளையராஜா தனக்கென தனியொரு ஸ்டுடியோவை வடிவமைத்துள்ளார். கோடம்பாக்கத்தில் இளையராஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட்டடித்தார். இசைஞானியின் ஸ்டுடியோவை பார்த்து பிரம்மித்து போன ரஜினிகாந்த், அங்கேயே சிறிது நேரம் இளையராஜாவிடம் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனிடையே இசைஞானி இளையராஜா முதன் முறையாக செய்து முடித்துள்ள அசத்தலான காரியம் குறித்து வெளியாகியுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இசைஞானியாக முத்திரை பதித்த இளையராஜா, முதன் முறையாக A Beautiful breakup என்ற ஆங்கில படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவுக்கு போட்டியாக களமிறங்கும் புது தொகுப்பாளினி... புதிய நிகழ்ச்சி குறித்த அதிரடி...!
இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அஜித் வாசன் என்பவர் இயக்கியுள்ளார். வெளிநாடு செல்லும் இந்திய இளைஞனுக்கும், அங்குள்ள வெள்ளைக்கார பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் கதையை முழுக்க ஆங்கிலத்தில் படமாக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.