
26 வயதே ஆன பிரபல நடிகையுடன் 70 வயது இயக்குநர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், இருவரும் டேட்டிங் செய்தார்களா? என சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ்பட், தனது 70வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அவரது மகள்களும் நடிகைகளுமான அலியா பட், பூஜா பட், ஷகீன் பட் ஆகியோருடன், மகேஷ் பட் தயாரிக்கும் ஜெலாபி படத்தின் நடிகையான ரியா சக்ரபோர்த்தியும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
பிறந்தநாள் விழாவுக்கு பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி பதிவேற்றிய புகைப்படம்தான்,தற்போது ஹோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படுக்கையறை ஒன்றில் இருக்கும் கட்டிலில் ரியா சக்ரபோர்த்தி அமர்ந்திருக்க, அவரை இருக அணைத்தபடி, இயக்குநர் மகேஷ் பட்இருக்கிறார்.
அந்த புகைப்படத்தின் கீழேயே நடிகை ரியா சக்ரபோர்த்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதாவது, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் புத்தரே. சார், இது நமது – நீங்கள் என்னை அன்பால் கைது செய்துவிட்டீர்கள். நீங்கள் என்மீது அன்பை காட்டினீர்கள். நீங்கள் எப்போதும் எனது சிறகுகளை கட்டிப்போட்டதில்லை.
நீங்கள் தான் எனது இதயத்தை தொட்டவர். வார்த்தைகள் பொய்யாகலாம். ஐ லவ் யூ! என நடிகைரியா சக்ரபோர்த்தி பதிவிட்டுள்ளார். நடிகையும், மகேஷ் பட்டும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், ரியா சக்ரபோர்த்தி கீழே எழுதியுள்ள வசனங்களை படித்தவுடன், இருவரும் டேட்டிங்செய்தார்களா? என்ற ரீதியில் கேள்வி கேட்டு, கொளுத்திப்போட்டார்கள். அந்த விவகாரம் ஹோலிவுட் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.