
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் அவர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த புகாரில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் ஆந்திராவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
இதனிடையே சில நாட்கள் பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது கடுமையான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு ‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதான ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.