
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி-க்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்யப்படு இந்நிகழ்ச்சியில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதுதவிர சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர்.
இதுதவிர மன அழுத்தம் காரணமாக வனிதாவும், உடல்நிலை சரியில்லாததன் காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தியும் பாதியிலேயே இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது நிரூப், அபிராமி, தாமரை, சுருதி, சதீஷ், ரம்யா பாண்டியன், ஜூலி, பாலா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி போட்டியாளர்களுக்கு வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும், அந்த வகையில் இந்த வாரம் கொடி என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் யாரிடம் அதிகளவில் கொடிகள் உள்ளதோ அவர் தான் வெற்றி பெறுவார். நிரூப் ஏராளமான கொடிகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறார்.
இதைப்பார்த்த அபிராமி, பாலா பார்த்து பயப்படாத நிரூப் என கேலி செய்கிறார். இதனால் டென்ஷன் ஆன நிரூப் அபிராமியை திட்டுகிறார். பதிலுக்கு அபிராமியும் நீ ஒரு ஃபிராடு டா என திட்டிவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே செல்கிறார். இதுகுறித்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நிரூப்பும், அபிராமியும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... silambarasan TR : நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு... திடீர் மோதலால் பரபரக்கும் கோலிவுட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.