
நேற்று ரிலீஸான 5 படங்களுமே வசூல் ரீதியாக படு தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அஜீத்தின் விஸ்வாசம் படமே இன்னும் வசூல் ரீதியில் முன்னணியில் உள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்று பிப் 1ம் தேதியன்று சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ மம்முட்டி நடித்த ‘பேரன்பு’, ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ புதுமுகங்கள் நடித்த ‘சகா’, ‘பேய் எல்லாம் பாவம்’ ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸாகியிருந்தன. இதில் சர்வம் தாள மயமும், பேரன்பும் சர்வ தேச விருதுகளை மட்டும் குறி வைத்து எடுக்கப்பட்டவை என்பதால் லோக்கல் மக்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
சிம்புவின் ‘வ.ரா.வ’ படம் தனக்குத் தானே பால் ஊத்திக்கொண்டதாலும், தயாரிப்பாளர் தரப்பு சம்பள விவகாரமாக சிம்பு மேல் இருந்த கோபத்தை விளம்பரம் செய்வதில் காட்டியதாலும் முதல் இரண்டு காட்சிகளோடு முக்காடு போட்டுக்கொண்டது. ஆனால் ஆச்சர்யமாக 4 வது வாரத்தைத் தொட்டிருக்கும் ‘விஸ்வாசம்’ இன்னும் சுமார் 200 தியேட்டர்களில் 40 முதல் 50 சதவிகித வசூலுடன் ஸ்டெடியாகப் போய்க்கொண்டிருப்பதாகவும், ரிலீஸ் படங்களை விட ரஜினியின் ‘பேட்ட’ படம் இன்னும் பெட்டரான கலெக்சனே செய்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.