பத்து ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கும் ஃபாசில்...ஹீரோ ? வேற யாரு...’அவரே’தான்...

By Muthurama LingamFirst Published Apr 4, 2019, 10:59 AM IST
Highlights

சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகக் களம் இயங்கவிருக்கிறார் எண்ணற்ற சில்வர் ஜூப்ளி படங்கள் தந்த இயக்குநர் ஃபாசில். இப்படத்தில் அவரது மகன் ஃபகத் ஃபாசிலே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகக் களம் இயங்கவிருக்கிறார் எண்ணற்ற சில்வர் ஜூப்ளி படங்கள் தந்த இயக்குநர் ஃபாசில். இப்படத்தில் அவரது மகன் ஃபகத் ஃபாசிலே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

1980ல் ‘மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஃபாசில் குடும்பத்தினருடன் பார்க்கக்கூடிய தரமான படங்களை மட்டுமே இயக்கியவர்.இதுவரை 31 படங்களை இயக்கியுள்ள ஃபாசில் 10 தமிழ்ப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கிய படம் ’லிவிங் டுகெதெர்’ 2011ல் வெளிவந்தது. 2002ல் ‘கையேத்தும் தூரத்து’ படத்தின் மூலம் தனது மகன் ஃபகத் ஃபாசிலை நாயகனாக அறிமுகப்படுத்தியிருந்தார்.

அப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்து ஒன்றிரண்டு படங்களை மட்டுமே இயக்கிவிட்டு சுமார் பத்தாண்டுகளாக நீண்ட ஓய்விலிருந்தார் ஃபாசில். இடையில் பிரித்விராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தில் மட்டும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் ஃபாசில்.

இந்நிலையில் தனது மகன் ஃபகத்தை நாயகனாகக் கொண்டு மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கத் தயாராகிவிட்டார் ஃபாசில். மலையாள நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக இருக்கும் ஃபகத் தனது தந்தையின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் செய்தி மலையாளத்திரையுலகில் பரபரப்பாகியிருக்கிறது.

click me!