
தமிழ் திரையுலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி, மிக குறுகிய வருடங்களிலே, 'நான்' திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறி, அடுத்தடுத்து தன்னுடைய வளர்ச்சி பாதையை தேர்வு செய்து, அதில் வெற்றிகரமாக பயணித்து வந்தவர் விஜய் ஆண்டனி. இவருக்கு தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் ஆண்டனி, தொகுப்பாளினியான பாத்திமா என்பவரை காதலித்து, கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மீரா - லாரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மீரா செப்டம்பர் 19ஆம் தேதி, அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 16 வயதே ஆகும் மீராவின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் புதன்கிழமை (இன்று) காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் அவரின் குடும்ப வழக்கப்படி, சர்ச்சில் தான் இவருடைய இறுதி சடங்குகள் நடந்தது.
பொண்ணு பார்க்க போன போது... பெண்களிடம் ஆண்கள் கேட்க கூடாத கேள்வியை மனைவியிடம் கேட்ட அருண் விஜய்!
அப்போது அவரது பாத்திமா விஜய் ஆண்டனி, மகள் சடலத்தின் முன்பு கண்ணீர் விட்டு கதறியபடி, "நான் உன்னை என் வயிற்றில், 10 மாதம் சுமந்தேன்... என்ன பிரச்சனை இருந்தாலும் நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே." இப்படி ஒரு முடிவை எடுத்துட்டியே... என அழுதது அங்கு கூடி இருந்த அனைவரது மனதையும் கலங்க செய்தது.
திரையுலகினர் அனைவரிடமும் நட்பு பாராட்டும் மனம் படைத்த விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து அறிந்ததுமே, அனிருத் ரவிச்சந்தர்,விஷால், ஹரீஷ் கல்யாண், பரத், ராதிகா, உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்றி, விஜய் ஆண்டனிக்கு தங்களின் ஆறுதலையும் தெரிவித்து வந்தனர்.
விஜய் ஆண்டனி தன்னுடைய மகளின் இழப்பால் துடித்து கொண்டிருக்கும் நிலையில்... அவருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பல ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தயாரிப்பாளர் தனன்ஜெயன், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலைத்தபோது, விஜய் ஆண்டனி பல மணிநேரமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றும், அவரை இப்படி பார்ப்பதே மிகவும் வேதனையாக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.