கோர விபத்து... பிரபல பாடகரின் 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 04, 2020, 07:20 PM IST
கோர விபத்து... பிரபல பாடகரின் 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு...!

சுருக்கம்

கடந்த ஞாயிற்றுகிழமை காலை அதிகாலையில் கலிபோர்னியாவின் தவுசண்ட் ஓக்ஸ் என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த கார் மரத்தின் மீது மோதி விபத்து நடந்துள்ளது. 

2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை, கடந்த 4 மாதங்களாக கொரோனாவால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் துக்க செய்திகளும் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. கொரோனாவால் திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, உயிரிழப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. 

அதேபோல் சில பிரபலங்களின் திடீர் மறைவும் லாக்டவுன் நேரத்தில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஹாலிவுட்டின் இளம் பாடகரான  ப்ரான்க் ஓஷன் என்பவருடைய 18 வயது தம்பி ரயன் ப்ரக்ஸ் கோர விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

கடந்த ஞாயிற்றுகிழமை காலை அதிகாலையில் கலிபோர்னியாவின் தவுசண்ட் ஓக்ஸ் என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த கார் மரத்தின் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இதில் 18 வயது நிரம்பிய ரயனும், அவருடைய நண்பரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?