மேடையில் பாடிக்கொண்டிருந்த அனிருத்.. சட்டென கையில் கிடைத்ததை அவர் மேல் வீசிய ரசிகர்கள் - அவர் ரியாக்ஷன் என்ன?

By Ansgar R  |  First Published Apr 11, 2024, 7:00 PM IST

Rock Star Anirudh : கோலிவுட் உலகில் இப்பொது உள்ள மிக முக்கிய இசையமைப்பாளர்களில் அனிருத் ரவிச்சந்திரன் அவர்களும் ஒருவர். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் அவர். 


கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் "3" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களின் உறவினர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத், இவ்வாண்டு வெளியாக உள்ள ஆறு முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்து  வருகின்றார்.தெலுங்கு திரை உலகில் உருவாகும் ஜூனியர் NTRன் "தேவாரா" என்ற திரைப்படம் அனிருத் இசையில் தான் உருவாகி வருகின்றது. 

Tap to resize

Latest Videos

அதகளமான புத்தம் புது திரைப்படங்கள்... டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன? முழு விவரம் இதோ

அதேபோல இவ்வாண்டு வெளியீட்டுக்காக காத்திருக்கும் கமலின் "இந்தியன் 2", சூப்பர் ஸ்டாரின் "வேட்டையன்", தல அஜித்தின் "விடாமுயற்சி", பிரதீப்பின் "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அவருடைய 23வது திரைப்படம் உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

தமிழ் திரை உலகின் ராக் ஸ்டாராக நிகழ்ந்து வரும் அனிருத் ரவிச்சந்திரன், அண்மையில் ஒரு மேடை கச்சேரியில் பங்கேற்றார். அப்பொழுது அவர் மேடையில் பாடி கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்து சில ரசிகர்கள் அவர் மீது வாட்டர் பாட்டில்களையும், பிற பேப்பர் போன்ற பொருட்களை வீசி எறிந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

ஆனால் அதிலிருந்து தப்பி நடனமாடியபடியே பாடிக்கொண்டிருந்த அனிருத், தொடர்ச்சியாக ரசிகர் ஒருவர் வீசிய பொருளை சட்டென கையில் பிடித்துக் கொண்டு, மேற்கொண்டு கோவப்படாமல் சந்தோஷமாக மீண்டும் பாட துவங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

We strongly condemn this kind of behaviour from some audience who thinks this is okay!

Throwing stuff on artists while they are performing on stage is neither fun nor safe.Just because they take it lightly & not make a scene doesn't mean it's acceptable! pic.twitter.com/2tvaY4eAqG

— Anirudh FP (@Anirudh_FP)

ஆனால் ஒரு கலைஞன் மேடையில் அவருக்கான பணியை செய்து கொண்டிருக்கும்பொழுது இப்படி அவர் மீது பொருட்களை வீசி எறிவது ஏற்புடையது அல்ல என்றும், இப்படியான செயலை அந்த கலைஞர் சிரிப்போடு ஏற்றுக் கொண்டார் என்றாலும் கூட, ரசிகர்கள் இப்படி செய்வது தவறு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

Ganesh : "ஷமிதா என் மருமகள் இல்ல.. என் மகள்" - மகன் ஸ்ரீகுமாரை கண்கலங்க வைத்த மூத்த இசையமைப்பாளர் கணேஷ்!

click me!