உங்க பொண்ணு வளர்ந்துட்டா அமீர்கான்; இனி இப்படி எல்லாம் ஃபோட்டோஸ் போடாதீங்க; ரசிகர்கள் அட்வைஸ்.

 
Published : May 31, 2018, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
உங்க பொண்ணு வளர்ந்துட்டா அமீர்கான்; இனி இப்படி எல்லாம் ஃபோட்டோஸ் போடாதீங்க; ரசிகர்கள் அட்வைஸ்.

சுருக்கம்

fans of Bollywood actor advised not to post picture like this

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் இணையத்தில் வெளிட்டிருந்த புகைப்படம் ஒன்று, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் தற்போது ”தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்” படத்தில் பிஸியாக இருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் சமுதாய பொறுப்புடைய திரைப்படங்கள் பலவற்றை இவர் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட இவரின் ”தங்கல்” படம் அந்த வகையில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய குழந்தைகளின் கல்வி தொடர்பான ”தாரே சமீன் பர்” படம் கூட பல விருதுகளை குவித்தது. மேலும் இது போன்ற திரைப்படங்களை எடுக்க மற்ற இயக்குனர்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் அமைந்தது.

தற்போது அமீர்கான் தனது மகள் ஹீரா கானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் ஹீரா கான், அமீர் கான் மீது அமர்ந்து விளையாடுகிறார். ஆனால் அந்த புகைப்படட்தை பார்த்த பலர் அமீர்கானை கடிந்திருக்கின்றனர்.

என்ன தான் உங்கள் மகளாக இருந்தாலும், அவர் வளர்ந்துவிட்டார். அதனால் இது போன்று இனி நடந்து கொள்ளாதீர்கள். பார்க்கும் அனைவர் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்காது. என அமீருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!