உறவினர் என்பதால் வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்...!

 
Published : May 31, 2018, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
உறவினர் என்பதால் வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்...!

சுருக்கம்

sivakartikeyan give the chance for releative

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஜம்ப் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், 'சீமராஜா' மற்றும் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும், 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை, 'அருவி' படத்தை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்த, இளம் இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று குமுளியில் போடப்பட்டு அதிகாரப்  பூர்வ தகவல் வெளியிடப்பட்டது .

மேலும் 'அருவி' படத்தில் படத்தொகுப்பாளராக இருந்த ரேமண்ட் இந்த படத்திற்கும் படத்தொகுப்பு செய்கிறார். அதே போல் 'மேயாத மான்' படத்திற்கு இசையமைத்த பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சிவா கார்த்திகேயன் கமிட் ஆக காரணம், இயக்குனர் அருண் பிரபு 'அருவி' என்கிற வெற்றி படத்தை கொடுத்தது மட்டும் காரணம் இல்லையாம்,  இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினர் என்பதால் என கிசுகிசுக்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!