நாட்கள் செல்ல, செல்ல மெழுகாய் உருகி வரும் கீர்த்தி சுரேஷ். தற்போது ஓவராக இளைத்து அநியாயத்திற்கு ஓவர் ஸ்லிம்மாகிவிட்டார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி, அடுத்தடுத்து தமிழில் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டானது. இதையடுத்து முன்னணி நடிகை அந்தஸ்துடன், ராசியான நடிகை என்ற பெயரையும் எடுத்தார். பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் தேசிய விருதை பெற்றுத் தந்தது.
இதையும் படிங்க: "தலைவர் 168" படத்தில் நயன்தாராவிற்கு இப்படி ஒரு கேரக்டரா? சத்தமே இல்லாமல் கசிந்த அதிரடி தகவல்...!
இதையடுத்து கீர்த்தி சுரேஷுன் மார்க்கெட் மளமளவென உயர ஆரம்பித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து தற்போது இந்தியில் கால் எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிவதால் உடல் எடையை குறைக்க தீர்மானித்த கீர்த்தி சுரேஷ் கடினமாக முயன்று செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். ஆனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று தீர்மானித்த அம்மணியை ஆசை விடவில்லை. அதனால் இன்னும், இன்னும் முயன்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.
இதையும் படிங்க: பஞ்சு மிட்டாயாய் கரைய வைக்கும் படுகவர்ச்சி... மாஸ்டர் பீஸாய் மாறிய மாளவிகா மோகனனின் ஹாட் கிளிக்ஸ்....!
நாட்கள் செல்ல, செல்ல மெழுகாய் உருகி வரும் கீர்த்தி சுரேஷ். தற்போது ஓவராக இளைத்து அநியாயத்திற்கு ஓவர் ஸ்லிம்மாகிவிட்டார். சமீபத்தில் பிங்க் நிற சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பார்க்கவே பரிதாபமாக இருக்கும் கீர்த்தியை பார்த்து, அவரது ரசிகர்கள் என்ன ஆச்சு உங்களுக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ....