இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த கூட்டணியில் புதிதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த "தர்பார்" திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் என விநியோகஸ்தர்கள் ஒரு பக்கம் போர்க்கொடி தூக்கி நிற்கின்றனர். இதனிடையே அஜித்தின் பேவரைட் இயக்குநரான சிவா இயக்கும் "தலைவர் 168" படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த கூட்டணியில் புதிதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே 90-ஸ்களில் டூயட் பாடிய மீனா, குஷ்பு உடன் நயன்தாராவும் இணைந்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே செம்ம எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் 168 படத்தில் நயன்தாரா இதுவரை சினிமாவில் ஏற்று நடிக்காத கதாபாத்திரமான வக்கீல் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
"தலைவர் 168" படம் குறித்து எவ்வித ஆதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவாராத நிலையில், இப்படி வெளியாகும் ருசிகரமான தகவல்கள் கூட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.