
பிக்பாஸ் தர்ஷன் மீது, அவருடைய காதலி சனம் ஷெட்டி, கொடுத்துள்ள புகார் தற்போது காட்டு தீ போல் பற்றி எரிந்து கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள், ஒவ்வொரு உண்மைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் கொடுத்துள்ள பேட்டியில், கண்டிப்பாக தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன், சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை. அதே போல் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தனர்.
ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின், தர்ஷனுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பார்த்து மனம் மாறிவிட்டார். சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் எனவே அவர் மீது சீட்டிங், மிரட்டல், தவறுதலாக பேசுவது உள்ளிட்ட 5 சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் சிலரும் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களுடைய பெயரை தற்போது வெளியே சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் சனம் ஷெட்டி கொடுத்துள்ள அணைத்து புகார்களுக்கு, உரிய ஆதாரங்கள் உள்ளதால், கண்டிப்பாக தர்ஷனுக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். தர்ஷன் தன்னை வளர்த்து விட்ட காதலியையே இப்படி திடீர் என கழட்டி விட்டுள்ளது ரசிகர்கள் சிலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.