
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை, தற்போது தெலுங்கில் 'நாரப்பா' என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரசிகர் ஒருவர் செய்த விபரீத செய்யலை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்: கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் வீட்டு கிரஹப்பிரவேசம்...! வைரலாகும் போட்டோஸ்..!
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்' திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டும் இன்றி, வசூலிலும் வாரி குவித்ததது. மேலும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் என்கிற தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ என்ற இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் ப்ரியாமணி நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: பனீர் மஷ்ரூம்... சமையலிலும் அசத்திய சிம்பு..! வைரலாகும் த்ரோ பேக் வீடியோ..!
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. அப்படியே திறந்தாலும், கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு, ரசிகர்கள் திரையரங்கு பக்கம் வர சில நாட்கள் எடுக்கும் என்றே கருதப்படுகிறது. எனவே தற்போது 'நாரப்பா' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகள்: 'ரோஜா' சீரியலில் புதிதாக இணைந்த நடிகை இவரா? வெளியான தகவல்!
ஆனால் ரசிகர்களோ, வெங்கடேஷ் நடித்துள்ள 'நாரப்பா' படத்தை திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் வெங்கடேஷின் தீவிர ரசிகை ஒருவர், 'நாரப்பா' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கையை பிளேடால் அறுத்து, தற்கொலைக்கு முயன்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.