
சூர்யா - சயிஷா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கியுள்ள திரைப்படம் 'காப்பான்'. என்.ஜி.கே படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் பாடலாசிரியர்களின் பெயர்கள் அச்சுப்பிழையா? என ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் அந்த போஸ்டரில் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.