
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடத்தப்பட்ட, டாஸ்க்கில் ஒரு சிறு பிரச்சனையை மீரா பெரிதாக்கினார். இதனால் ஒட்டு மொத்த போட்டியாளர்களின் கோபமும், மீரா மீது பாய்ந்துள்ளது. பலரும் சாக்ஷிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.
பின்னர் இந்த வார, கேப்டனாக இருந்த சாக்ஷி, 'நான் மீட்டிங் அரேஜ் செய்தார்'. ஆனால், மீரா தான் மீட்டிங் அரேஞ் பண்ணவே சொல்லவில்லை, என திடீரென மீரா பல்டி அடித்தார்.
ஆனால், மீரா தன்னுடைய பேச்சில் உறுதியாக இருந்தார். இதனால், தற்போது அவருக்கு எதிராக குறும்படம் ஒன்று போட வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
அதேபோல் இன்றைய அடுத்த புரமோவில் 'மீட்டிங் யார் அரேஜ் பண்ண சொன்னது என்பதை உறுதி செய்ய ஒரு குறும்படம் வேண்டும் என சேரன் உள்ளிட்ட போட்டியாளர்கள் கேட்க, கமலும் ஓகே சொல்ல இன்று ஒரு குறும்படம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இந்த குறும்படத்தில் மீராவின் முகத்திரை கிழிய வாய்ப்பு உள்ளது என்றும், அதனை எப்படி சமாளிப்பார் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.