ஆடையை அவிழ்க்க சொன்னார்... கண்ட இடத்தில் கைவைக்க பார்த்தார்... இயக்குநர் மீது இளம் நடிகை பகீர் புகார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 15, 2020, 09:19 PM IST
ஆடையை அவிழ்க்க சொன்னார்... கண்ட இடத்தில் கைவைக்க பார்த்தார்... இயக்குநர் மீது இளம் நடிகை பகீர் புகார்...!

சுருக்கம்

இப்போது நான் தைரியமாக சொல்வேன் என்னுடைய 17 வயதில் சாஜித் கான் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் என்னிடம் மிகவும் அசிங்கமாக பேசினார். 

கடந்த 2018ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து, திரைத்துறையில் பல இயக்குநர்கள், நடிகர்களின் தூக்கத்தை கெடுத்தது மீடூ விவகாரம். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் இளம் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த திரைப்பிரபலங்கள் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டது.படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது குறித்தும், கட்டாயப்படுத்தப்பட்டது குறித்தும் பல நடிகைகள் தற்போது பொது வெளியில் தைரியமாக பேசி வருகிறார்கள். 

அப்படி பிரபல மாடல் நடிகை ஒருவர் பிரபல இயக்குநர் மீது மீடூ புகாரை முன்வைத்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான சஜித் கான், நடிகை டிம்பிள் பாவ்லாவை பாலியல் நோக்கத்துடன் அனுகியது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மீடூ பிரச்சனையின் போது பல பெண்கள் சஜித் கான் பற்றி பேசியுள்ளனர். அப்போது நான் அதைப்பற்றி பேசாமல் இருந்துவிட்டேன். பிற நடிகைகளை போன்றே எனக்கும் காட்ஃபாதர் இல்லை, என் குடும்பத்திற்காக நான் தான் சம்பாதிக்க வேண்டி இருந்தது. அதனால் அமைதியாக இருந்தேன். தற்போது என் பெற்றோர் இல்லை. நான் எனக்காக தான் சம்பாதிக்கிறேன். 

எனக்கு 17 வயதில் பாலியல் துன்புறுத்தல் செய்தார் சஜித் கான் என்று என்னால் தற்போது தைரியமாக சொல்ல முடியும்.  அவர் என்னிடம் மிகவும் அசிங்கமாக பேசினார். என்னை தொட முயன்றார். வரப்போகும் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால், அவர் முன்னால் உடைகளை அவிழ்க்க சொன்னார். அவர் பல பெண்களுக்கு என்ன செய்தார் என்பது கடவுளுக்கு தெரியும். இத்தனை காலம் மௌனமாக இருந்துவிட்டேன், இன்னும் பேசாமல் இருப்பது தவறு என நினைப்பதால், இப்போது இதை சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
a

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!