விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ரெடி... புகுந்து விளையாடி பரிசுகளை அள்ளத் தயாரா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 15, 2020, 08:35 PM IST
விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ரெடி... புகுந்து விளையாடி பரிசுகளை அள்ளத் தயாரா?

சுருக்கம்

இதில் பங்கேற்பவர்களுக்கு அசத்தலான பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  World's Biggest fan of Thalapathy Vijay டைட்டில் வெல்பவருக்கு ஒரு பஜாஜ் பல்சர் 150 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.  

இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதனால் “மாஸ்டர்” பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பிரச்சனை என்று முடிவுக்கு வரும், எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எந்த தகவலுமே தெரியாததால், இதுவரை “மாஸ்டர்” பட ரிலீஸ் தேதி குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதனிடையே தளபதி ரசிகர்களை குஷியாக்குவதற்காக 7 ஸ்கீரின் ஸ்டுடியோ லலித்குமார் கேம் ஷோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சி மூலமாக விஜய்யின் வெறித்தனமான ரசிகருக்கு  World's Biggest fan of Thalapathy Vijay என பட்டம் அளிக்க உள்ளனர். விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் பல லட்சம் பேர் இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை யார் வெல்லப் போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

இதில் பங்கேற்பவர்களுக்கு அசத்தலான பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  World's Biggest fan of Thalapathy Vijay டைட்டில் வெல்பவருக்கு ஒரு பஜாஜ் பல்சர் 150 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி வாரா வாரம் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மாஸ்டர் முதல் நாள் படம் பார்ப்பதற்கான 5 டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளன. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!