போதை பொருள் சர்ச்சை: தமிழ் நடிகையின் சகோதரியும் சிக்கினார்... விரைவில் கைது செய்யப்படுவாரா?

Published : Sep 04, 2020, 02:51 PM IST
போதை பொருள் சர்ச்சை: தமிழ் நடிகையின் சகோதரியும் சிக்கினார்... விரைவில் கைது செய்யப்படுவாரா?

சுருக்கம்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமிழ் நடிகை ஒருவரின் சகோதரிக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாக தெரியவந்தது. அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இன்று விசாரணைக்கு ஆஜராக மறுத்த ராகினி, வரும் திங்கள் கிழமை ஆஜராவதாக தனது வழக்கறிஞர் மூலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தார். 


இந்நிலையில், இன்று காலை கன்னட நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரோ கொரோனாவை காரணம் காட்டி ஆஜராகவில்லை. இன்று காலை ராகினி திரிவேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்படுவரா? என்ற பதற்றம் கன்னட திரையுலகில் உருவாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
ஜன நாயகன் முதல் நாள் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.. எவ்வளவு தெரியுமா?