யோகி பாபுவிற்கு தளபதி விஜய் கொடுத்த பாராட்டு; அசத்துறீங்க யோகி பாபு;

 
Published : May 21, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
யோகி பாபுவிற்கு தளபதி விஜய் கொடுத்த பாராட்டு; அசத்துறீங்க யோகி பாபு;

சுருக்கம்

famous Tamil actor appreciates Tamil comedian for his performance

யோகி பாபு தமிழில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தனது நகைச்சுவை நடிப்பின் மூலம், இன்று தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் ரிலீசாகிய கோலமாவு கோகொலா திரைப்பட பாடல்களில், யோகி பாபு, நயன்தாராவிடம் பிரபோஸ் செய்யும் பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த பாடல் இப்போது இணையத்தில் செம வைரலாகி இருக்கிறது.

”எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி” என வரும் அந்த பாடலில் யோகிபாபுவின்  காமெடி நடிப்பை பார்த்துவிட்டு, திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தளபதி விஜயும் யோகி பாபுவிற்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு யோகி பாபுவின் திரையுலக வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. காளி படத்தில் கூட யோகி பாபுவின் நடிப்பை திரை விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

காளி திரைப்படத்தின் பாஸிட்டிவ் மற்றும் நெகடிவ் பற்றி குறிப்பிடுகையில், யோகி பாபுவின் காமெடியை ஒரு முக்கிய பாஸிடிவ் பாயிண்டாக குறிப்பிட்டிருந்தனர். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அசத்துறீங்க யோகி என அவரைப் பாராட்டி வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!