
கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கியது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். ஓட்டுமொத்த படக்குழுவும் பயோ பபுளுக்குள் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையும் படிங்க: சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கிடைத்த கஞ்சா... திசைமாறும் தற்கொலை வழக்கு... போலீசாரிடம் சிக்கிய பகீர் ஆதாரம்!
இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரஜினிக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இச்சம்பவம் ஓட்டுமொத்த திரையுலகையே உலுக்கியெடுத்த நிலையில், அதேபோல் மற்றோரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க: ‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...!
தமிழில் சிம்பு, அனுஷ்கா, பரத் உள்ளிட்டோர் நடிப்பில் வானம் படத்தை இயக்கியவர் க்ரிஷ். தெலுங்கில் வைஷ்ணவ் தேஜ் இயக்கத்தில் படத்தை முடித்த க்ரிஷ், அடுத்து பவன் கல்யாணை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட க்ரிஷ், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பவன் கல்யாண் படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.