பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 19, 2020, 06:20 PM IST
பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

சுருக்கம்

இதுபற்றி அவருடன் நடித்து வந்த முன்னணி நடிகர்களான ஷபீர் ஆலுவாலியா மற்றும் ஸ்ரீதி ஜா ஆகியோர் ஜரீனாவுடனான செல்பி புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜீ  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று இனிய இரு மலர்கள். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சீரியலாக இருந்தாலும் இந்த தொடருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.நடிகர் ஷபீர், ஸ்ரீதி ஜா, ஜரினா ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரியலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இதையும் படிங்க: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

இந்த சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் ஜரினா ரோஷன் கான். இவர் இந்த தொடரின் இந்தி பதிப்பான கும்கும் பாக்யா தொடர் மூலமாக மிகவும் பிரபலமானவர். தற்போது 54 வயதான நிலையில், ஜரினாவிற்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

 

இதையும் படிங்க: அட அமலா பாலா இது?... நடுக்காட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!

இதுபற்றி அவருடன் நடித்து வந்த முன்னணி நடிகர்களான ஷபீர் ஆலுவாலியா மற்றும் ஸ்ரீதி ஜா ஆகியோர் ஜரீனாவுடனான செல்பி புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்டத்தில் சண்டை பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கிய ஜரீனா மெல்ல வளர்ந்து சீரியல், வெள்ளித்திரையில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்