
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயதுமூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார். சென்னை தி.நகர் நாதமுனி தெருவில் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் குடும்பத்துடன் வசித்து வந்தார். 91 வயதான அவர், சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: திடீரென ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்… ஆலோசித்த விஷயம் என்ன?
அந்த வகையில் வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண், பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அன்புள்ள அப்பா, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா? உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: கோவில் கட்டிக்கொடுத்த தளபதி! குழந்தைகளுக்கு விஜய் பட பெயர்களை வைக்கும் மக்கள்- தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?
இந்த நிலையில் 91 வயதான ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 6.40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். இதை அடுத்து அவரது உடல் இன்று (21.11.2022) மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.