பிரபல மலையாள இயக்குனரும் ,நடிகருமான கலாசால பாபு மரணம்

 |  First Published May 14, 2018, 10:59 AM IST
famous Malayalam actor passed away



கலாசால பாபு பிரபல மலையாள இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பிரபல மலையாள நட்சத்திரங்களுடன் பல வெற்றித்திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இணையே தேடி என்ற மலையாளத்திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.

Tap to resize

Latest Videos

உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் கலாசால பாபு சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் இவருக்கு  ஆபரேஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வலிப்பால் தனது 63ஆவது வயதில் இன்று மரணமடைந்தார்.

இவரது இழப்பு மலையாள திரையுலகினரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கலாசால பாபுவின் பிரிவால் துயரத்திலிருக்கும் அவர் குடும்பத்திற்கு, திரையுலகை சார்ந்த அவரது நண்பர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

click me!