தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் மூன்று சூர்யா பட இயக்குனர்கள்!

By manimegalai aFirst Published Aug 28, 2019, 12:03 PM IST
Highlights

திரைப்படங்களை விட, சமீப காலமாக இளைஞர்களை அதிகம் ஈர்த்து வருவது, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வெப் சீரிஸ், மற்றும் குறும்படங்கள். இதனால் இதுபோன்ற படங்களை தயாரித்து வெளியிடும் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.
 

திரைப்படங்களை விட, சமீப காலமாக இளைஞர்களை அதிகம் ஈர்த்து வருவது, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வெப் சீரிஸ், மற்றும் குறும்படங்கள். இதனால் இதுபோன்ற படங்களை தயாரித்து வெளியிடும் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.

அதே போல் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த, பல முன்னணி நடிகர்கள் கூட தற்போது, வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகிய நால்வரும் இணைந்து நெட்ஃபிளிக்ஸிற்காக 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தனர்.

இது, ஒரே கருத்தை வலியுறுத்தி, 4 குறும்படங்களின் சங்கமமான அதாவது அந்தாலஜி, வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.  

இதேபோல தமிழிலும் அந்தோலஜி வகையில் ஒரு வெப் சீரிஸை முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர்  இணைந்து ஆந்தாலஜி டைப்பில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு நீண்ட தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் இயக்குனர் வெற்றிமாறனை தவிர, கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், மற்றும் சுத்த கொங்கரா ஆகிய மூவரும் நடிகர் சூர்யாவை இயக்கிய இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!