வெறும் 100ரூபாய், 200 ரூபாய் சம்பளத்துக்கு இத்தனை படங்கள்லயா நடிச்சார் ‘பரோட்டா’சூரி?...

By Muthurama LingamFirst Published Aug 28, 2019, 11:41 AM IST
Highlights

நீண்ட நெடிய 20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப்பின் இன்னும் ஓரிரு மாதங்களில் வெற்றிமாறனின் வைரமோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகன் அந்தஸ்துக்கு உயரவிர்ருக்கும் நடிகர் பரோட்டா சூரிக்கு இன்று 42 வது பிறந்தநாள். இதை ஒட்டி திரையுலக பிரபலங்கள் அவரை வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
 

நீண்ட நெடிய 20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப்பின் இன்னும் ஓரிரு மாதங்களில் வெற்றிமாறனின் வைரமோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகன் அந்தஸ்துக்கு உயரவிர்ருக்கும் நடிகர் பரோட்டா சூரிக்கு இன்று 42 வது பிறந்தநாள். இதை ஒட்டி திரையுலக பிரபலங்கள் அவரை வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

இன்று முன்னணி காமெடியனாய் தினம் ஒன்றுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கும் சூரியின் சினிமா எண்ட்ரி அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை. 99ம் ஆண்டு ’நினைவிருக்கும் வரை’படத்தின் மூலம் ஜூனியர் ஆர்டிஸ்டாய் அறிமுகமான சூரிக்கு அடுத்த ஆறு ஆண்டுகளும் அவ்வாறே அமைந்தன. ஒரு நாளைக்கு 100 ,200 சம்பளத்தில் நடித்துக்கொண்டிருந்த சூரியை தமிழக ஜனங்களுக்கு அடையாளம் காட்டிய முதல் படம் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடிக் குழு’.அப்படத்தின் மூலம் காமெடியன் புரமோஷன் பெற்ற சூரி அடுத்து தனது இயல்பான நகைச்சுவையால் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார் என்பதுதான் நிஜம்.’வெ.க.குழு’படத்துக்கு முன்னதாக அவர் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த படங்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும்.

அவரது அடுத்த அவதாரத்தை, அதாவது கதாநாயகன் அந்தஸ்தை வழங்க இயக்குநர் வெற்றிமாறன் முன் வந்திருப்பது சூரிக்கு நடந்திருக்கும் பெரும் திருப்பம். நடிப்போடு நின்றுகொள்ளாமல் சமூக அக்கறை சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். இது குறித்த பதிவு ஒன்றை அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியிட்டிருக்கும் இயக்குநர் ‘கத்துக்குட்டி’சரவணன்,...இரா.சரவணன்
@erasaravanan.1h...கஜா நேரத்தில் உற்ற துணையாக ஓடோடி வந்து செருவாவிடுதி கிராமத்தில் மக்களோடு மக்களாக அரசுப் பள்ளியில் தங்கி, உறங்கி, முடிந்த நிவாரணத்தையும் ஆறுதலையும் வழங்கியவர் நடிகர் சூரி. மறக்க முடியா பேருதவி. நடிகர் சூரி அவர்களுக்கு டெல்டா மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! என்று தெரிவித்திருக்கிறார்.

தனது பிறந்தநாளை ஒட்டி வாழ்த்துச் சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் அனுப்பியுள்ள சூரி,...அனைவருக்கும் வணக்கம்,நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.இன்று என் பிறந்த நாளை வாழ்த்துக்களால் அலங்கரித்து அளவில்லா அன்பால் திக்குமுக்காட வைத்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இன்று நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதில் பெரும்பங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், எனது ரசிகர்கள், என் நண்பர்களுக்கும் உண்டு. அவர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த நன்றி.உங்களது ஆதரவினாலும், அன்பினாலும் நான் மேலும் மேலும் எனது சிறந்த நடிப்பினை உங்களுக்கு அளித்து மகிழ்விப்பேன்.என்றும் அன்புடன், சூரி என்று எழுதியுள்ளார்.

click me!