டி.வி. தொகுப்பாளினியை விஷம் கொடுத்து எரித்து கொன்ற கொடூர கணவன்... கள்ளக்காதலால் நடந்த பயங்கரம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 13, 2020, 04:12 PM IST
டி.வி. தொகுப்பாளினியை விஷம் கொடுத்து எரித்து கொன்ற கொடூர கணவன்... கள்ளக்காதலால் நடந்த பயங்கரம்...!

சுருக்கம்

கடந்த 30ம் தேதி கணவர் ரவீந்தர் பால் சிங் உடன் நைனிடால் சென்ற அனிதா சிங், கரிக்கட்டையாக கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பஞ்சாப்பில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அனிதா சிங். இவரது உடல் எரிந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ம் தேதி கணவர் ரவீந்தர் பால் சிங் உடன் நைனிடால் சென்ற அனிதா சிங், கரிக்கட்டையாக கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சந்தேகத்தின் பேரில் கணவர் ரவீந்தர் பால் சிங்கை விசாரித்த போலீசார், பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரபல தொகுப்பாளினியான அனிதா சிங்கிற்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது அவரது கணவருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனிதா சிங்கை நைனிடாவில் உள்ள தனது நண்பரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ரவீந்தர் பால். அங்கு நண்பர் குல்தீப்பின் வீட்டில் உணவு அருந்தும் போது, அனிதா சிங்கிற்கு விஷம் கலந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. அந்த உணவை உட்கொண்ட அனிதா மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ரவீந்தர் பால் சிங்கும், அவரது நண்பர் குல்தீப்பும் சேர்ந்து அனிதாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். 

போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காகவும், உடலை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவும் அனிதாவின் உடலை காட்டுக்கு எடுத்துச் சென்ற இருவரும், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?