தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வானத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!

Published : Feb 13, 2020, 03:02 PM ISTUpdated : Feb 13, 2020, 03:52 PM IST
தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வானத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!

சுருக்கம்

சமீப காலமாக படத்தை எடுத்து முடிக்க எந்த அளவிற்கு படக்குழு செலவு செய்கின்றனரோ... அதே அளவிற்கு படத்தின் புரொமோஷன் பணிகளுக்கும் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.  

சமீப காலமாக படத்தை எடுத்து முடிக்க எந்த அளவிற்கு படக்குழு செலவு செய்கின்றனரோ... அதே அளவிற்கு பாடத்தின் புரொமோஷன் பணிகளுக்கும் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

போஸ்டர், பேனர், கட்- அவுட் போன்றவற்றில் படத்தை புரொமோஷன் செய்த காலம் எல்லாம் இப்போது ரொம்ப பழசாகிவிட்டது. மாறாக, பிளைட்டில் படத்தின் போஸ்டரை ஒட்டி பறக்க விடுவதை புது ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, மற்றும் தர்பார் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும் பிளைட்டில்.... பட புரொமோஷன் நடந்த நிலையில், தற்போது சூர்யா நடித்துள்ள, 'சூரரை போற்று' படத்திற்கும் பிளைட்டில் ப்ரோமோஷன் பணிகள் நடக்கிறது.

அதாவது, இந்த படத்தில் இருந்து, ‘வெய்யோன் சில்லி’ என்கிற பாடல் 3 , மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலை வானத்தில் பரந்த படியே பிளைட்டில் இருந்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது சூர்யாவின் சூரரை போற்று போஸ்டர் ஒட்டிய பிளைட்டின் முன், ரசிகர்கள் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?