"ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்".. தளபதியின் அரசியல் வருகை - வாழ்த்து சொன்ன பிரபலத்தின் ட்வீட் வைரல்!

By Ansgar R  |  First Published Feb 3, 2024, 2:54 PM IST

Thalapathy Vijay : கோலிவுட் உலகில் உச்ச நடிகராக இருந்து வரும் விஜய், தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2026ம் ஆண்டு தேர்தலில் அவருடைய கட்சி களம்காணவுள்ளது.


தமிழ் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் அவர்கள் தனது "தமிழக வெற்றி கழகம்" கட்சி குறித்த அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் தங்களுடைய ஆதரவு இல்லை என்றும் அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 

மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் தளபதி விஜய் அவர்களுடைய தலைமையிலான "தமிழக வெற்றி கழகம்" அரசியல் களம் காணும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட தளபதி 69 திரைப்பட பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு முழுநேர அரசியலில் அவர் ஈடுபட உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

சினிமாவை விட்டு விலகும் விஜய்! ஏற்றுக்கொள்ள மறுக்கும் சுட்டி குழந்தை செய்யும் அளப்பறையை பாருங்க.. வைரல் வீடியோ

இது குறித்து தளபதி விஜய் அவர்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் பலரும், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகையை பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திரை வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லும் விஜய் பாராட்டுக்கு உரியவர்...
Welcome to the political arena
Joseph Vijay...!
களத்தில் சந்திப்போம்...!

— கரு பழனியப்பன் (@karupalaniappan)

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான கரு பழனியப்பன் நேற்று வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.. "திரை வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் என சொல்லும் விஜய் பாராட்டுக்குரியவர். தேர்தல் களத்திற்கு உங்களை வரவேற்கிறேன். ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்" என்று கூறியிருக்கிறார். 

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்..” நேற்று இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே..

click me!