“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Published : Sep 09, 2023, 08:10 AM IST
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

சுருக்கம்

Ethirneechal G. Marimuthu Death Controversy : சின்னத்திரையின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ஜோதிடர்களை பகைத்து கொண்டதற்காக தான் மரணம் அடைந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகரும் ,இயக்குனருமான மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறலாம். எதிர்நீச்சல் சீரியல் மூலமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சீரியல் ரசிகர்கள் மட்டுமின்றி இணையதள ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் என்றே சொல்லலாம். 

இவர் நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இவரின் வசனம், தோரணை  என அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களில் மாரிமுத்துவின் வசனங்களும் அவரது புகைப்படங்களும் வைரல் ஆகி வந்தது.

இந்த சூழலில் நேற்று காலை நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது பூதவுடல் இறுதிச்சடங்கிற்காக சென்னையில் இருந்து மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுச் செல்லப்பட்டது. இன்று செப்டம்பர் 9ஆம் தேதி பிற்பகல் வேளையில் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மாரிமுத்து மரணத்திற்கான காரணம் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர், அங்கிருந்த ஜோதிடர்களுக்கு எதிராகக் கார சாரமான விவாதங்களை முன்வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவின் பிறந்த தேதி குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு பிறகு ஜோதிடர், மாரிமுத்துவின் குணாதிசயங்கள் பற்றி கூறினார்.

ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்

தொடர்ந்து, “உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்னை இருக்கிறதா என கேட்க, மாரிமுத்து இல்லை” என்றார். அத்துடன், இடுப்பிற்கு மேல் உங்களுக்கு மேல் பிரச்னை இருக்கிறது என சொல்ல உடனே மாரிமுத்து வேடிக்கையாக இடுப்பிற்கு மேல், இதயம் ஒடிக்கொண்டே, துடிக்கிறது “ என்றார். இந்த வீடியோவில் ஜோதிடர் சொன்னது போல் உண்மையில் மாரிமுத்துவிற்கு இதயத்தில் பிரச்னை இருந்து இருக்கிறது போல என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், உண்மையில் ஜோதிடர் வாக்கு பளித்துவிட்டது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாரிமுத்துவிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்த ஜோதிடர் மகரிஷி கே ஆர் மந்த்ராச்சலம் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகரும், இயக்குனருமான மாரிமுத்துவின் மறைவுக்கு அனைத்து ஜோதிடர்கள் சார்பாக இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது. நான் சொல்றது 2 நடக்கவில்லை என்றால் 2 கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம், இது வெறும் நிகழ்ச்சி தான் என்று கூறினார். அவர் மன்னிப்பு கேட்டார், அதோடு இப்பிரச்சனை முடிந்து விட்டது. ஜோதிடர் என்பது வழிகாட்டுபவர். வலைத்தளங்கள் வந்த பிறகு உண்மை ஜோதிடர் யாரென்று தெரியவில்லை. 

இறந்தவரை போய் தவறாக பேசுவது சரியானது கிடையாது. சன் டிவி சீரியலில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஒருவேளை அது கூட காரணமாக இருக்கலாம். ஜோதிடத்தை பொறுத்தவரை கடவுளை ஏமாற்றி இருப்பவன், கர்மாவால் பாதிக்கப்படுவான். ஜோதிடர்கள் தெய்வத்தின் தூதர்கள். அப்படி யாரும் செய்யமாட்டார்கள். அது அவரது தொழில்" என்று கூறியுள்ளார்.

BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்தியப் படங்கள் - லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படமும் இருக்கு..!
7.45 லட்சம் கோடி டீல்... ஹாலிவுட் சாம்ராஜ்ஜியத்தையே வளைத்துப்போட்ட நெட்ஃபிளிக்ஸ்..!