கோலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிமூன்று முறை WWE உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சினாவுடன் எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஜான் சினா உள்பட ஒரு சில முன்னணி WWE மல்யுத்த கலைஞர்களுடன் நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் நடைபெறும் WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டாக்கிள் 2023 நிகழ்ச்சிக்காக பிரபல மல்யுத்த வீரர்கள் அங்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் லைவ் WWE நிகழ்வுகள் ஹைதராபாதில் இந்த 2023ம் ஆண்டு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கான ப்ரமோஷன் பணிகளில் தான் தற்போது நடிகர் கார்த்தி ஈடுபட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் Networth..! வைரலாகும் தகவல்!
செத் ரோலின்ஸ், ஜிந்தர் மஹால், நடால்யா, ட்ரூ மெக்கின்டைர் மற்றும் குந்தர் ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ளனர். இந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த WWE நட்சத்திரங்களுக்கு எதிராக ஜான் மற்றும் ரோலின்ஸ் டேக் டீம் மேட்சில் அணிசேர உள்ளனர். அதே நேரத்தில் WWE மகளீர் சாம்பியனான நடால்யாவை எதிர்த்து அந்த பட்டத்துக்காக ரிஹெங் ரிப்லி போட்டியிடவுள்ளார்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, நடிகர் கார்த்தி சமீபத்தில் WWE டேக் டீம் மேட்சுகளை விளையாடி வரும் கெவின் ஓவன்ஸ் மற்றும் சமி ஜெய்ன் ஆகியோருடன் ஒரு புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.