இந்நிலையில் இரண்டாவது காதலருடன் அம்மணி செம்ம ரொமாண்டிக்காக பொழுதை கழித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
பிரபல இயக்குநரை உருகி, உருகி காதலித்த பிரபல நடிகை. உடனடியாக திருமணமும் செய்து கொண்டார். கோலிவுட்டே பார்க்க ஆகா...ஓஹோ என்று வாழ்ந்த அந்த காதல் தம்பதி வாழ்க்கையில் பிரபல நடிகர் ஒருவர் குறுக்கிட்டார். சும்மா இருந்த நடிகைக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்டு திசை திருப்பினார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் காதல் கணவரையே கடாசிவிட்டு, படங்களில் தீவிரமாக நடித்து வந்தார்.
நடிகைக்கு என்னா தொழில் பக்தி, புருஷனை விட நடிப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்களே என்று அனைவரும் பாராட்டி வந்த நிலையில், மற்றொரு திரைப்பிரபலத்துடன் காதலில் கசிந்துருக ஆரம்பித்தார். இப்போதைக்கு கல்யாணம் செய்ய முடியாது என்று பிரபல நடிகையைப் போல காதலருடன் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் வாழ ஆரம்பித்தார். இந்நிலையில் இரண்டாவது காதலருடன் அம்மணி செம்ம ரொமாண்டிக்காக பொழுதை கழித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இதனால் கடுப்பான ஹீரோயின் இரண்டாவது காதலரை சத்தமே இல்லாமல் கழட்டிவிட்டார்.வெறும் போட்டோ வெளியிட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்று விசாரித்தால். போட்டோ வெளியானதால் எல்லாம் ஹீரோயின் பொங்கிவிட வில்லையாம். இதற்கு முன்னால் அந்த காதலருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியானதே. அப்படி என்ன காரணம் என்றால்...?
தற்போது நடிகையின் வாழ்க்கையில் புதிதாக ஒரு நடிகர் என்ட்ரியாகியுள்ளாராம். 3வது காதலர் மீது உருவான திடீர் காதலால் தான் மும்பை பிரபலத்தை கழட்டிவிட்டாராம் அந்த பிரபல நடிகை. “பால்” எது.. கள் எது என்று தெரியாத நிலையில், இந்த காதல் எத்தனை நாளைக்கு நிலைக்கு போகுதோ என்று கோலிவுட்டில் கிண்டல் செய்து வருகின்றனர்.