க்யூட் ஸ்மைலில் மனதை அள்ளும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... இப்ப இவங்க பிரபல ஹீரோயின்...!

Published : May 28, 2020, 07:20 PM IST
க்யூட் ஸ்மைலில் மனதை அள்ளும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... இப்ப இவங்க பிரபல ஹீரோயின்...!

சுருக்கம்

பொக்கை வாயை திறந்து அழகாக சிரிக்கும் அந்த க்யூட் குழந்தை போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.   

மலையாளம் மற்றும் தமிழில் உருவான 'நேரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், குழந்தை நட்சத்திரமான நஸ்ரியா.இந்த படத்தை தொடர்ந்து, 'ராஜா ராணி', 'நையாண்டி',  'வாயை மூடி பேசவும்' போன்ற பல படங்களில் நடித்தார். தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

திருமணத்திற்குப்பின் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த இவர் 2018ஆம் ஆண்டு கூடே என்கிற மலையாள படத்தில் கம் பேக் கொடுத்தார்.  இந்த படத்தை தொடர்ந்து இப்போது தன்னுடைய கணவருடன் சேர்ந்து  'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். தம், படுக்கை அறை காட்சிகள் என அந்த படத்தில் நஸ்ரியா நடித்த பல காட்சிகள் சர்ச்சையை கிளப்பியது. 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நஸ்ரியா, கணவர் ஃபகத் பாசிலுடன் எடுத்துக்கொண்ட ரொமெண்டிக் கிளிக்ஸை அவ்வப்போது இன்ஸ்டாவில் தட்டிவிட்டு, முரட்டு சிங்கிள்ஸை வயிறெறிய வைக்கிறார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள பிரபலங்கள் பலரும் தங்களது சின்ன வயது போட்டோக்களையும், மறக்க முடியாத பட அனுபவங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதலிடத்தில் இருப்பது நம்ம குஷ்பு தான். தனது குழந்தை பருவம் முதல் குமரி வயது வரையிலான அரிய வகை போட்டோஸை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்... அந்தணர் குறித்து அவதூறு... காட்மேனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்...!

அந்த பட்டியலில் தற்போது நஸ்ரியாவும் இணைந்துள்ளார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை பருவ போட்டோவை பகிர்ந்துள்ளார். நடிகையாக மட்டுமல்ல குட்டி பாப்பாவாக இருக்கும் போதே செம்ம க்யூட்டாக இருக்கிறார் நஸ்ரியா. பொக்கை வாயை திறந்து அழகாக சிரிக்கும் அந்த க்யூட் குழந்தை போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!