மூச்சுத்திணறலால் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி... கொரோனா பீதியால் தவிக்கும் ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2020, 6:55 PM IST
Highlights

இந்நிலையில் ஜெயந்திக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் கே.பாலச்சந்தரின் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பழம் பெரும் நடிகை ஜெயந்தி. எதிர்நீச்சல், நீர்க்குமிழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெமினி கணேஷன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

தற்போது 75 வயதாகும் ஜெயந்தி மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுகணமே அவருக்கு அங்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இந்நிலையில் ஜெயந்திக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பிரச்சனையால் பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வந்த நிலையில், பழம் பெரும் நடிகையான ஜெயந்திக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

click me!