
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம், நடிகை ஓவியாவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. ஆனால் ஓவியா ஆரவ் மீது காதல் ஏற்பட்டு, அந்த காதல் தோல்வியடைந்ததால் மனஉளைச்சல் காரணமாக வெளியேறினார்.
சமீபத்தில் கூட 'நான் சிங்கள், இப்படி இருப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளது' என ட்விட் செய்திருந்தார். இவருடைய இந்த ட்விட்டருக்கு, ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஓவியாவை பலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தி வரும், தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர அழைத்தும் ஓவியா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நடிகர் 'விஷ்ணு விஷால்' அவர் தயாரித்து நடித்துள்ள, கதாநாயகன் படத்தின் புரொமோஷனுக்காக இந்த படத்தின் நாயகி கேத்ரீன் தெரேசாவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இதுகுறித்து விஷ்ணு தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் கூறியிருந்தார்.
விஷ்ணுவின் இந்த டுவிட்டிற்கு நடிகர் விக்ரம் பிரபு,பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி சூப்பர், ஆனால் நான் ஓவியா அங்கு இருந்தால் மட்டுமே செல்வேன் என்று அதிரடியாக ட்விட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.