
இந்தி சினிமாவில் 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் ஸ்டைலிஷ் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தியை தவிர பொங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை காந்தம் போல் தான் பால் ஈர்த்தவர். தமிழில் கூட “யாகவாராயினும் நாகாக்க” என்ற படத்தில் மும்பை தாதாவாக நடித்துள்ளார். சுமார் 570க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், சமூக சேவகர், தொகுப்பாளர் என்ற பன்முக திறமைகளை கொண்டவர். 3 முறை தேசிய விருது பெற்ற மிதுன் சக்கரவர்த்தி, ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது தந்தை பசந்த்குமார் சக்கரவர்த்தி, நீண்ட நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் எடுக்க மட்டும் வர்றீங்க...விஜய் மாதிரி உங்களுக்கும் பொறுப்பு இருக்கு...புதுச்சேரி முதல்வரின் அதிரடி!
நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 95 வயதான பசந்த்குமார் சக்கரவர்த்தி, கடந்த 21ம் தேதி செவ்வாய் கிழமை மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மிதுன் சக்கரவர்த்தி கர்நாடகாவில் சிக்கியுள்ளார். இந்த சோகமான செய்தி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதுனின் தாய் சாந்திமோயியும், மிதுனின் மூத்த மகன் மிமோ சக்ரவர்த்தியும் இறுதிச்சடங்கு வேலைகளை செய்து வருவதாகவும், மிதுன் சக்கரவர்த்தி கர்நாடகாவில் இருந்து மும்பை வந்து சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.