அம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...!

Published : Apr 23, 2020, 02:35 PM IST
அம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...!

சுருக்கம்

இதுவரை தன்னுடைய சிறிய வயது புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த, சாய் பல்லவி தற்போது, தொள தொள வென கவுன் அணிந்தபடி, குழந்தையாக இருக்கும் தன்னுடைய தங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   

இதுவரை தன்னுடைய சிறிய வயது புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த, சாய் பல்லவி தற்போது, தொள தொள வென கவுன் அணிந்தபடி, குழந்தையாக இருக்கும் தன்னுடைய தங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை தன்னுடைய தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள நீ நானாக இருந்தால் தான் புரியும் என்றும், என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் மிகவும் அதிஷ்டசாலி, 100  ஆண்டுகள் நீ நலமுடன் வாழ வேண்டும் என மிகவும் உருக்கமாக தன்னுடைய தங்கையை வாழ்த்தி, செல்லமாக குரங்கு என்றும் கூறியுள்ளார்.

ஒரு மருத்துவரான, சாய் பல்லவி... நடனம் மற்றும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் எதேர்ச்சியாக, 'பிரேமம்' படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடித்த படங்கள் அடுக்கடுக்காக வெற்றி பெற்றதால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.

கடைசியாக தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக, சாய்பல்லவி நடித்த NGK திரைப்படம் வெளியானது. தமிழில் தற்போது இவரின் கை வசம் எந்த படமும் இல்லை என்றாலும், தெலுங்கில், லவ் ஸ்டோரி, வைராட பரவாம் 1922 ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தங்கைக்கு அம்மாவாக மாறி சிறு குழந்தையாய் இருக்கும் போது எடுத்த புகைப்படம் முதல்  தற்போது வரை, தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வரை சாய் பல்லவி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கபப்ட்டு வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

20 நாட்களாக பேசவில்லை... மகளின் தற்கொலைக்கு பகீர் விளக்கம் கொடுத்த நடிகை நந்தினியின் தாய்
ஜன நாயகன் படத்திற்குத் தடங்கல் – அதிகாலை காட்சி ரத்து: ஏன், எதற்கு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!