பிரபல நடிகர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 26, 2021, 8:02 PM IST
Highlights

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நடிகர் மம்முட்டி குடும்பத்தினர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

click me!